பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


1. விக்கெட் வந்த வரலாறு (WICKET)

நான்கைந்து நாட்களாக இருந்தாலும், வெயில், மழை பனி, குளிர் என்று இயற்கை சூழ்நிலை எவ்வாறு திரிந்தாலும், எல்லாவற்றையும் பொருட்படுத்தாது, எந்த நிலையிலும் உற்சாகம் குறையாது, பார்த்து ரசித்து மகிழும் லட்சோபலட்சம் பார்வையாளர்களைத் தன்னகத்தே கொண்டு புகழ்பெற்று விளங்குவது கிரிக்கெட் ஆட்டமாகும்.

குறிக்கம்பமாகத் தோன்றிய கிரிக்கெட் எவ்வாறு பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதைத்தான் முதல் பக்கத்தில் உள்ள படம் விளக்குகிறது.

கிரிக்கெட் ஆட்டத்தில் கீள்த்தி மிக்கப் பொருளாக விளங்குவது விக்கெட் ஆகும். கிரிக்கெட் ஆட்டத்தின் நோக்கமே, எதிராட்டக்காரர் காத்து நின்று விளையாடுகின்ற விக்கெட்டை, எப்படியும் வீழ்த்தி, ஆட்டக்காரரை ஆட்டமிழக்கச் (Out) செய்துவிட வேண்டும் என்பது தான்.

இத்தகைய குறிக்கோளுக்கு இலக்காக நிற்கும் விக்கெட் வளர்ந்த விதமே, வேடிக்கையாகத் தான்