பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

கிரிக்கெட் ஆட்டம் பற்றி வருகின்ற எனது இரண்டாவது நூலாகும் கிரிக்கெட் ஆட்டத்தின் கதை' எனும் இந்நூல். ஏற்கெனவே, கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதசில என்ற முதல நூல் வெளி வந்து, மாணவர்களிடையேயும் பொது மக்களிடையேயும் சிறந்த வரவேற்பினைப் பெற்றிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, கிரிக்கெட் விளையாடுவது, எப்படி? ‘கிரிக்கெட் ஆட்டத்தில் சுவையான நிகழ்ச்சிகள்‘ எனும் நூல்களும் விரைவில் வெளிவர இருக்கின்றன.

எனது விளையாட்டுத்துறை தமிழ் இலக்கிய நூல்களைப் பார்க்கும் அன்பர்கள், ஏன் நீங்கள் கிரிக்கெட் பற்றி எழுதுவதில்லை. என்று அடிக்கடி கேட்டதின் விளைவாகவும்; கிரிக்கெட் பற்றி தமிழில் எழுதவே முடியாது என்று அடித்துச் சொன்னவர்களுக்குப் பதிலாகவும், கிரிக்கெட் நூல்கள் இப்பொழுது தொடர்ந்து வெளிவருகின்றன.

மக்களிடையே அதிகம் வரவேற்பினைப் பெற்றிருக்கும் கிரிக்கெட் ஆட்டம், அதிகமான அளவில் ஆங்கிலச் சொற்களாலேயே பேசப்படுகிறது. அதற்குரிய கலைச் சொற்களாக தமிழில் சொற்களை உருவாக்கி கற்கிற பொழுது, ‘இவை வேண்டாமே’ என்று கேட்கின்றவர்களும் உண்டு.

'தமிழில் விளையாட்டுகளுக்கும் ஏற்ற கலைச் சொற்கள் இருக்கின்றன. ஏற்ற சொற்களை முயன்றால்' நிச்சயம் உருவாக்க முடியும்’ என்ற நம்பிக்கையில் தான் மிகவும் முயன்று, பல கலைச்சொற்களை உருவாக்கி இருக்கிறேன்.