பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


அதுபோலவே, தரையில் ஊன்றி வைக்கப்படும் இரண்டு அல்லது மூன்று குறிக்கம்புகள் ஒன்றாக விழாமல் இணைந்து நிற்கவும், சேர்ந்தாற்போல் ஒரு தோற்றத்தை அளிக்கவும் உதவிய அமைப்பினாலே, இது Bail என்ற பெயரையே பெற்றுவிட்டது. நாம் தமிழில் இதனை 'இணைப்பான்' என்று கூறுகிறோம். விக்கெட்டுக்குரிய மூன்று கம்புகளையும் இது இணைத்திருக்கும் தன்மையாலேயே இணைப்பான் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. ஆரம்ப நாட்களில் தரையில் ஊன்றிய இரு கம்புகளுக்கு மேலே ஒரு கம்பாக (Stick) வைக்கப்பட்டது. அதற்குப் பிறகே, அது குச்சியின் நீண்ட வடிவத்திலிருந்து குறுகிய வடிவம் பெற்றது. 1785ம் ஆண்டுக்கு முன்னர் மூன்றாம் குச்சியாக இணைக்கும் தன்மை பெற்றிருந்த இணைப்பான் (Bail) விக்கெட்டின் அமைப்பும் வடிவும் மாற, தானும் குறுகிய அளவில் மாறத் தொடங்கியது. விக்கெட் எவ்வாறு மாற்றமடைந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்ளும்போது, இணைப்பானும் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதும் நமக்குத் தானாகவே தெரிந்து விடுகிறது. 1700ம் ஆண்டுவரை 2 கம்புகளே விக்கெட்டாக இருந்தன. 1776ம் ஆண்டு, மூன்று கம்புகளாக மாறின. அப்பொழுது ஒவ்வொரு குறிக்கம்பின் (Stump) உயரமும் 22 அங்குலமாக இருந்தது. மூன்று குறிக்கம்புகளும் 16 அங்குலத்திற்குள்ளே ஊன்றப்பட, அவற்றின் மேலே ஒரே ஒரு இணைப்பான் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது. 1798ம் ஆண்டு 3 கம்புகள் ஊன்றப்பட்டிருந்தன. அதன் உயரம் 22 அங்குலத்திலிருந்து 24 அங்குலமாக உயர்ந்தது. விக்கெட்டின் அகலம் 6 அங்குலத்திலிருந்து 7