பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா



இவ்வாறு 1771 ம் ஆண்டு 41/4 அங்குலமாக ஆக்கப்பட்ட மட்டையின் அளவே, இன்று வரை நீடித்து நிலவி வருகிறது. ஆனால், பந்தாடும் மட்டையின் உயரம் பற்றி யாருமே கவலைப்படவில்லை. 1835ம் ஆண்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வார்விக் ஆர்ம்ஸ்ட்டார்ங் எனும் ஆட்டக்காரர் 38 அங்குல உயரமுள்ள ஒரு மட்டையுடன் விளையாட வந்தார். அவரது எடை 22 ஸ்டோன் ஆகும். அதாவது 308 பவுண்டாகும். அவர் கையில் உள்ள சிறிய பந்தாடும் மட்டையைப் பார்த்த எட்மண்ட் பிளன்டன் (Edmund Blunden) என்பவர் கேலியாகக் குறிப்பிட்டார்.

'ஆர்ம்ஸ்ட்ராங் கொண்டுவந்த பந்தாடும் மட்டையோ (தேநீர் கலக்கும்) 'டீஸ்பூன்' போல் இருக்கிறது. அவர் பந்தெறியும் விதமோ (டிகாஷன் இல்லாத) சாதா டீ போல இருக்கிறது என்பது தான். இது நடந்த ஆண்டு 1835 மட்டையின் அளவான 38 அங்குல உயரமே அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே மாறாமல் அமைந்து விட்டது. பந்தாடும் மட்டையின் உயரமும் அகலமும் மாறிவிட்டது. அதன் எடை பற்றிய எந்தவித முடிவுக்கும் யாரும் வரவில்லை. ஆட்டம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு தான் வந்தது. 19ம் நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரராக விளங்கிய 'வில்லியம் வார்டு' என்பவர், ஆஸ்திரேலியா சிறந்த ஆட்டக்காரரான டான் பிராட்மென் என்பவரைப் போல வல்லவர். அவர் உபயோகித்த மட்டையின் எடை 4 பவுண்டு 2 அவுன்சுகளாகும். அதற்குப் பிறகு, மட்டை செய்யப் பயன்படுகின்ற மரமாக வில்லோ (Willow) என்பது தான் பலவிதப் பரிசோதனைகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டது.