பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

61


. எறிவார்கள் என்று எதிர்பார்த்துத்தானோ என்னவோ, இதற்கு முன்னேயே இப்படித் தற்காத்துக் கொண்டாடும் உறைகளை கண்டுபிடித்திருப்பார்களோ என்று தான் இன்று எண்ண வேண்டியிருக்கிறது? ஆரம்ப காலத்தில் பந்தெறியாளர்கள் (Bowler) இப்பொழுது போல் கைசுழற்றி எறியாமல், கீழே உருட்டித்தான் எறிந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது பந்தை எளிதாகத் தடுத்தாடிக் கொண்டிருந்தார்கள் ஆட்டக்காரர்கள். நாளாக நாளாக பந்தெறியும் வேகத்தில் விரைவு கூடி விடவே, அதனை தடுத்தாட ஒரு வழியைக் கண்டுபிடிக்க ஒரு சிலர் முனைந்தனர். 1880ம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. சர்ரே மாகாணத்தைச் சேர்ந்த ஃபார்ன்காம் எனும் பகுதியில் வாழ்ந்த ராபர்ட் ராபின்சன் என்பவர், தனது ஒரு காலில் மெல்லிய பலகைத் துண்டுகளை வைத்து, தோல்பட்டையால் கட்டிக் கொண்டு விளையாட வந்து சேர்ந்தார். கூடி நின்றவர்கள் கைகொட்டி நகைத்தனர். இப்படி ஒரு கண்டுபிடிப்பா என்று ராபின்சனின் நண்பர்கள் சிரித்தனர். கண்டவர்கள் அனைவரும் கேலிசெய்தார்களே தவிர, அவர் காலில் கட்டிக்கொண்டு பாதுகாப்புடன் ஆடிய காட்சியானது அவர்கள் மனதைவிட்டு மாறவோ மறையவோ இல்லை. நீங்காத நினைவாக அந்த நிகழ்ச்சி கிரிக்கெட் ஆட்ட உலகில் கொடிகட்டிப் பறந்ததன் விளைவு, 1841ம் ஆண்டு, ஒரு புதிய அமைப்பில் காலுறையைக் கொண்டு வந்திது. நாட்டிங்காம்ஷயரைச் சேர்ந்த தாமஸ் நிக்சன் என்பவர், கார்க்கால் ஆன புதிய காலுறைகளை தயார் செய்து கொண்டு வந்து ஆடினார். இருந்தாலும் முந்தைய உறைகளை விட இது திருந்திய வடிவம் பெற்றிருந்ததே தவிர திருப்திகரமானதாக அமையவில்லை. என்றாலும், ஆட்டத்தில் இம்முறை இதமாக இடம்பெற்றுக்கொண்டது.