பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5


ஒரு உயிரினும் மேலான ஆட்டமாக எண்ணி ஆடியதின் விளைவே, காப்பாற்றியதின் முடிவே, இந்த ‘உலக மகா புகழ்பெற்ற நிலைக்குக்’ கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

தாய்நாட்டு சட்டத்தைப் போலவே, கிரிக்கெட்டின் விதிகளை மதித்தார்கள் ஆங்கிலேயர்கள் என்றால், அந்த உணர்வே, ஆட்டத்தின் செழுமைக்கும் சீரிய வளர்ச்சிக்கும் வித்தாக, சத்தாக விளங்கியிருக்கிறது.

'கிரிக்கெட் ஆடுபவர்கள் பண்பாளர்கள்' என்று பேசுகின்ற அளவில் ஆட்டம் பண்பு நடைபோடுவதால்தான், மக்கள் மிகவும் விரும்புகின்றார்கள். மதித்துப் பேசுகின்றார்கள். பாராட்டி மகிழ்கின்றார்கள்.

அத்தகைய அரிய ஆட்டத்தின் வரலாற்றை, வளர்ச்சியைத்தான், கிரிக்கெட் ஆட்டத்தின் கதை என்று உங்கள் கையில் உருவாக்கித் தந்திருக்கிறேன்.

நூலைப் படிக்கத் தொடங்கும் உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது. படித்து மகிழுங்கள். என் முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்.

மேலும் பல விளையாட்டுத்துறை தமிழ் இலக்கிய நூல்களை எழுதி வெளியிடும் ஆற்றலை எனக்குத்தாருங்கள் என்று உங்கள் கையில் நூலைப் படைக்கிறேன்.

வணக்கம்.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா