பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


முறையில் புதிய நுணுக்கமும், திறமையும் ஏற்பட்டது என்பதையெல்லாம் மேலே கண்டோம். இனி எட்டாத பந்தெறி (Wide Ball) என்ற விதிமுறை எவ்வாறு ஏற்பட்டது என்பதை தொடர்ந்து காண்போம்.

6. எட்டாத பந்து ஏறி(Wide Ball)

1810 ஆம் ஆண்டில் ஒரு நாள், இங்கிலாந்து நகரில் உள்ள லார்டு எனும் கிரிக்கெட் மைானத்தில். ஒற்றை விக்கெட் போட்டி ஆட்டம் (Single Wicket Tournament) நடக்கவிருந்தது. அந்தப் போட்டியில் ஆடவிருந்த இரு குழுவினர்களும் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

ஒற்றை விக்கெட் போட்டியில், ஒரு குழுவிற்கு இரண்டு ஆட்டக்காரர்கள் தான் இருப்பார்கள். ஒருவர் பந்தெறிவாள் (Bowl). இன்னொருவர் தடுத்தாடுவாள் (Field). அடித்தாடும் ஆட்டக்காரர்களில் யாராவது ஒருவர் அவுட்டாகி ஆட்டமிழந்தாலும், அந்தக் குழு ஆடும் வாய்ப்பை இழந்து விடும். இந்த முறையில் அமைந்த போட்டிக்குரிய இரண்டு குழுவினர்தான் அன்று வந்திருந்தனர்.

ஃபிரடெரிக், ஹவார்டு என்பவர்கள் ஒரு குழுவினர், ஸ்கொயர், லாம்பர்ட் என்பவர்கள் மற்றொரு குழுவினர். விளையாட வந்திருந்த ஸ்கொயர் (Squire) எனும் ஆட்டக்காரருக்கு உடல் நலம் இல்லாத காரணத்தால், ஆட இயலாமல் இருந்தார். அதனால் இன்னொரு நாள் ஆடலாம் என்பதற்கு, எதிர்க்குழுவினர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர் குழுவைச் சேர்ந்த பிரடெரிக் என்பவர் இன்றே ஆடித் தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார். ‘ஆடினால் இன்றே ஆடவேண்டும். இல்லையேல் ஆட்டத்தில் தோற்றதாக ஒத்துக்கொள்ள வேண்டும்.’ என்றும் வலியுறுத்தினார்.