பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


விரைவாக ஆட்டம் வளர்ந்து கொண்டு வந்ததற்கேற்ப வசதியாக, ஆடையில் மாற்றம் ஏற்பட்டு, இடுப்பில் சரிவரப் பிடிப்புடன் இருக்கும் வண்ணம் இடைவாரும், (Belt) இடம் பெற்றது.

இதற்கிடையில், காலணிகளும் (Shoes) அடிக்கடி மாற்றம் பெற்றுக்கொண்டே வந்தன. ஏறத்தாழ 1860-ம் ஆண்டு காலத்தில், மாநிறமுள்ள (Brown) காலணிகளும், சில நேரங்களில் வெண்ணிற காலணிகளும் ஆட்டக்காரர்களால் விரும்பி அணியப்பட்டன.

ஆனால் 1850-ம் ஆண்டுக்குப் பிறகு, வெண்ணிற மான் தோலால் (Buck Skin) ஆனக் காலணிகளை அணிந்து ஆடும் பழக்கமே நடைமுறை மரபு வழக்கமாக அமைந்திருந்தது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள்.

கிரிக்கெட் சங்கத்தைச் சோந்த ஆட்டக்காரர்கள் நீண்ட அளவுள்ளதாக, முழுக்கால் சட்டை அணிந்து கொண்டிருந்த பொழுது, பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆட்டக்காரர்கள், வண்ண வண்ணக் குல்லாய்களை விரும்பி அணிந்து ஆடி வந்தனர். அந்தப் பழக்கம் இன்னொரு பழக்கத்தையும் அழைத்து வந்தது.

வண்ண வண்ண குல்லாய்கள் அணிந்தது போலவே, வண்ண வண்ண மேலுடைகளையும் அணிந்து ஆடும் பழக்கம், 19-ம் நூற்றாண்டில் பெருகி வந்தது.

ஆனாலும் , 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்டக் காரர்கள் , வெள்ளை நிற உடைகளையே அணிந்திடவேண்டும் என்ற மரபு எப்படியோ எழுந்து, அந்த ஆடை முறையே இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.