பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27


விருக்கும் பந்தடி ஆட்டக்காரர் அறிந்திருப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

தான் தொடர்ந்து எறியும் முறையில் மாற்றம் செய்து கொள்ள விரும்பினால், உடனே அதை அவர் நடுவருக்குக்கூறி, அவர்மூலம் அடித்தாடும் ஆட்டக்காரருக்கும் உணர்த்திவிட வேண்டும்.

40. அவ்வாறு பந்தெறிபவர் தன் மாற்றத்தை உணர்த்தாவிட்டால் என்ன செய்வது?

அப்படி அறிவிக்காமல் இருப்பது முறையிலா ஆட்ட நெறியாகும் (Unfair). அதற்குரிய தண்டனையாக நடுவர் 'முறையிலா பந்தெறி' (No ball) என்று அறிவித்துவிடுவார்.

அதேபோல், வேறு பல சூழ்நிலைகளிலும், 'முறையிலா பந்தெறி' என்று நடுவர் அறிவிப்பார். அதனையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏதாவது ஒரு காரணத்தால், பந்தெறிபவர் கையிலிருந்து எறிகின்ற தருணத்தில், பந்து கையைவிட்டு வெளியே செல்லாது தேங்கிப் போனால், அதுவும் 'முறையிலா பந்தெறி' என்றே நடுவரால் அறிவிக்கப்படும்.

தான் முறையாக பந்தெறிவதற்கு முன், எதிரில் நின்று தடுத்தாட இருக்கும் பந்தடி ஆட்டக்காரரின் விக்கெட்டை அவர் ஓட முயன்றால் அதை வீழ்த்துவதற்காக, பந்தை வீசி எறிந்தால், அதுவும் 'முறையிலா பந்தெறி' என்றே அறிவிக்கப்படும்.