பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை


கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில் என்ற தலைப்புடன் படைக்கப் பெற்றிருக்கும் இந்நூல், கிரிக்கெட் ஆட்டத்தின் விதிமுறைகளையெல்லாம் விளக்கமுறப் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய முறையிலே எழுதப்பெற்றிருக்கும் ஓர் இனிய நூலாகும்.

எனது விளையாட்டுத் துறை நூல்களையெல்லாம் காண்பவர்கள், ஆர்வமுடன் பார்த்தபிறகு அடுத்ததாக விடுக்கும் வினா ஒன்று எப்பொழுதும் உண்டு. கிரிக்கெட்டைப் பற்றிய புத்தகமே இல்லையா என்பது தான் அந்த வினா.

விளையாட்டில் விருப்பமுள்ளவர்கள் மட்டும்தான் கேட்கிறார்கள் என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் அதை வேடிக்கையாக மட்டுமல்ல. விநயத்தோடும் குத்தலாகவும் கேட்கின்றவர்களும் உண்டு என்று பலரது கேள்விகளுக்குப் பதில் கொடுக்கப்போய் நான் புரிந்து கொண்டேன்.

அந்த புரிந்த நிலையினால் எழுந்த திறந்த ஞானத்தின் பிரதிபலிப்பே இந்நூல்.

கிரிக்கெட்டைப் பற்றி தமிழில் நூல் எழுத முடியாது. அது மிகவும் கஷ்டமான காரியம். அதனால்தான் இவரால் எழுத முடியவில்லை. என்று என் முன்னாலேயே சொல்லிச் சென்றவர்களும் நிறைய பேர் உண்டு.

எட்டாவது பொங்கல் விளையாட்டு விழா காஞ்சிபுரத்தில் 1976ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றபோது. என் நூல்கள் காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்