பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

 நேராக வந்து பந்தின் விக்கெட் வழியை மறிக்கும் நிலையில் குறுக்காக அவர் நின்று கொண்டிருந்தாரா?

3. அடித்தாடுவோரின் கையைத் தவிர, மற்ற உடலின் ஒரு பகுதி அல்லது உடை ஏதாவது முதலில் பந்தைத் தடுத்ததா?

4. பந்தானது விக்கெட்டுக்கும் விக்கெட்டுக்கும் நேர்க் கோட்டின் அமைப்பில் விழுந்து எழும்பி வரும்போது, பந்துக்கும் விக்கெட்டுக்கும் இடையில் அவரது உடலோ அல்லது உடைப்பகுதியோ இருந்ததா ?

இத்தகைய கேள்விகளுக்கு எல்லாம் "ஆமாம்" என்ற விடை எழுந்தால்தான், உடனே நடுவரால் அந்த முடிவுக்கு வரமுடியும்.

ஆகவேதான், பந்தினை ஊன்றி உன்னிப்பாகக் கவனித்து ஆடவேண்டும். என்றாலும், நடுவரின் இந்த முடிவு அவரது ஆழ்ந்த கணிப்பின் கீழ்தான் அடங்கியிருக்கிறது.

81. ஓட்டத்தில் ஆட்டமிழத்தல் (Run out) என்பது எவ்வாறு முடியும்?

பந்தெறியாளர் விதிகளுக்கு உரிய முறையில் சரியாகப் பந்தை எறிகிறார் பந்தடி ஆட்டக்காரர் அதை அடித்தாடிவிடுகிறார். பந்து அப்பால் போனதும், இரண்டு பந்தடி ஆட்டக்காரர்களும், ஒட்டம் எடுக்கும் முயற்சியில், எதிரெதிர் விக்கெட்டை நோக்கி ஓடுகின்றார்கள்.

அதாவது பந்து ஆடப்பட்டிருக்கும் நேரத்தில் அவர்கள் ஒட்டம் எடுக்கின்ற முயற்சியில், அடித்தாடும் எல்லைக் கோட்டுக்கு அப்பால் (Popping crease) இருக்கும்போது அவர் விக்கெட் வீழ்த்தப்பட்டால், விக்கெட்டுக்குரியவர் ஆட்டமிழந்து வெளியேற வேண்டும்.

கிரிக்-4