பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

அப்படி ஆட்டமிழக்க வேண்டிய அவசியமில்லை. அவர் பந்தை ஆடிய பிறகு, இருவரும் ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், அந்த நேரத்தில் அந்த பந்து விக்கெட்டை வீழ்த்தினாலும், இருவரும் ஆட்டமிழக்க வேண்டிய நிலைமை நேராது.

ஏனெனில், அவர் அடித்தாடிய பந்தானது விக்கெட்டைப்போய் தொட்டு வீழ்த்துவதற்கு முன், தடுத்தாடும் குழுவிலுள்ள ஒருவரால் தொடப்பட்டிருக்க வேண்டும். அடிப்பட்ட பந்துதானேபோய் விக்கெட்டை மோதி வீழ்த்தினால், அதற்கு யாரும் பொறுப்பல்ல.

தடுத்தாடும் குழுவினர் பந்தை வீசி, எறிந்திருக்க வேண்டும். ஓட்டத்தில் ஆட்டமிழத்தல் என்பதற்கு மேலே கூறிய சந்தர்ப்பங்களே பொருந்தும்.

83. விக்கெட்டை அடித்து வீழ்த்துதல் (Stumped) என்பது எவ்வாறு நிகழும்?

முறையிலா பந்தெறி (No Ball) இல்லாமல் ஒரு பந்தெறியாளர் எறிகின்ற பந்தை, அடித்தாடும் ஆட்டக்காரர் அடிக்கும் முயற்சியில் அடிக்காமல் தவறிப் போய் தனது அடித்தாடும் எல்லைக் கோட்டுக்கு வெளியே வந்து விடுகிறார். அதாவது அவர் அடிக்க எடுத்துக் கொண்ட வேகத்தால் குறிதவறி விடவே சமநிலை இழந்து, எல்லையை விட்டு வெளியே வந்து விடுகிறார். ஆனால், ஓட்டம் எடுக்கும் முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

விக்கெட் பின்புறம் நிற்கின்ற விக்கெட் காப்பாளர், அதே சமயத்தில் குறிதவறி அடிபடாது தன் பக்கம் வந்தப் பந்தைப் பிடித்து, தனது குழுவினரில் யாருடைய உதவியுமில்லாமல், விக்-