பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

ஆனால் பந்தைக் கையால் ஆடுதல், இரு முறை ஆடுதல், தடுத்தாடும் ஆட்டக்காரரை ஆடவிடாமல் தடுத்தல், ஓட்டத்திற்கிடையில் ஆட்டமிழத்தல் என்ற குற்றம் இழைத்த அடித்தாடும் ஆட்டக்காரர், இயல்பாகவே ஆட்டம் இழக்கும் வாய்ப்பினைப் பெறுகிறார்.

இந்த விதியால் அடித்தாடும் ஆட்டக்காரருக்குக் கிடைக்கின்ற லாபம் என்னவென்றால், அவர் தனக்குரிய பந்தை அடித்தாடுகின்ற உரிமையை முழுமையாகப் பெறுவதற்கும், தான் காத்து விளையாடுகின்ற விக்கெட்டை விக்கெட் காப்பாளரின் இடையீடின்றிக் காத்துக் கொள்ளவும் முடிகிறது என்பதுதான்.

88. ஒரு தடுத்தாடும், ஆட்டக்காரர் (Fieldsman) தனது தொப்பியால் பந்தைத் தேக்கி நிறுத்துகிறார். அது சரியான முறைதானே?

சரியான முறை அல்ல. அது கடுமையான தவறாகும், அதற்குத் தருகின்ற தண்டனையும் அவ்வாறே அமைந்திருக்கிறது.

ஒரு தடுத்தாடும் ஆட்டக்காரர், தன் உடலின் எந்தப் பகுதியினாலாவது பந்தைத் தடுக்கலாம். தடுத்து நிறுத்தலாம். ஆனால், வேண்டுமென்றே தனது தொப்பி போன்றவற்றைப் பயன்படுத்தித் தடுத்தாடினால் அதனால் அடித்தாடிய குழுவிற்கு 5 ஓட்டங்களை நடுவர் வழங்குவார்.

89. இந்த விதியை இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள்?