பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58


வில்லை. பந்து நிலைப்பந்தாகிவிட்டது என்று அறிவிப்பதுடன், அவர்கள் இருவரும் மேற்கொண்ட ஓட்ட முயற்சிகள் அனைத்தையும், அம்முயற்சியில் எடுத்திருக்கும் ஓட்டங்கள் அனைத்தையும் நிராகரித்துத் தள்ளி விடுவார்.

இந்த நிலைமைக்கு அவர் அவ்வாறு ஆட்படக் காரணம் என்னவெனில், அந்த இருவரும் அடித்தாடும் எல்லைக் கோட்டைத் தொடாமல், எல்லைக்கு வெளியிலே இருப்பதால், தடுத்தாடும் ஆட்டக்காரர்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, விதிமுறைகளுக்கேற்ப, அவர்களை ஆட்டமிழக்கச் செய்ய (Out) இயலாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.

95. 'குறை ஓட்டம்' என்பதற்கு நடுவர் காட்டும் சைகை என்ன?