பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59


குறை ஓட்டம் அல்லது அதனைத் தொடர்ந்து ஓடி, பந்து 'நிலைப்பந்தாகி'விட்டவுடன், நடுவர் குறிப்பாளர்களை நோக்கி, தனது ஒருகையை மேல் நோக்கி மடித்து, ஒரு விரலால் தன் அதே கையின் தோள் பகுதியைத் தொட்டுக் குறித்துக் காட்டுவார்.

அதேபோல், ஒன்றுக்கு மேற்பட்ட பல குறை ஓட்டங்கள் இருந்தால், அவற்றை, குறிப்பாளருக்கு எத்தனை என்பதையெல்லாம் சுட்டிக்காட்டிஅறிவுறுத்தவேண்டும்.

96. அடித்தாடும் பந்தானது, எல்லைக் கோட்டுக்கு வெளியே (Boundary) சென்றால் எத்தனை ஓட்டங்கள் தரப்படும்?

4 ஓட்டங்கள்.

97. மைதான எல்லை எவ்வளவு என்று எப்படி தெரியும்?

ஆட்டம் தொடங்குவதற்காக, நாணயம் சுண்டி முடிவெடுப்பதற்கு முன்னரே, இருகுழுத் தலைவர்களும் எல்லையின் அளவைப் பார்த்து, இணக்கமுறப் பேசி, எல்லை எவ்வளவு? எந்த நிலையில் எத்தனை ஓட்டங்கள் தருவது போன்றவற்றையெல்லாம் பேசி, ஒருமுடிவுக்கு வந்துவிடுவார்கள்.

கொடிகள் அல்லது கொடிக் கம்புகள் மூலமாக எல்லைக் கோட்டைக் குறித்துக் காட்டி, அவைகளை இணைக்கும் கோடாகச் சுண்ணாம்புக் கோடுகள் அல்லது கற்பனை கோடுகள் இருக்கும்.

98. ஓட்டங்கள் பெறுகின்ற எல்லை கடக்கும் பந்து (Boundary) என்று எப்படி கூறலாம்?