பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


இவ்வாறு அவர் விடும் அறிவிப்பை, எந்த நேரத்திலும் அறிவிக்கலாம். இதற்காகக் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை.

106. தொடர்ந்தாட விடுதல் (Following innings) என்றால் என்ன?

ஒரு பந்தடித்தாடுகின்ற குழு, தான் முதலில் அடித்தாடும் உரிமை பெற்று, ஒரு குறிப்பிட்ட 'ஓட்டங்கள்' எடுத்ததற்குப் பின், அடுத்த குழு பந்தாட வந்து ஆடி முடித்த பிறகும், தங்களுக்கு இன்னும் அதிக ஓட்டங்கள் இருக்கின்றன என்றும் கருதினால், அடுத்த 'முறை ஆட்டத்தையும்' (Inning) தொடர்ந்து ஆமோறு கேட்டுக் கொள்கின்ற உரிமை அவருக்கு உண்டு. அவ்வாறு கேட்டுக் கொள்ளும்போது, எதிர்க் குழுவும் இணங்கி ஏற்றுக்கொண்டு தொடர்ந்து ஆடத் தான் வேண்டும். வேறு வழியில்லை.

இம்முறையைத்தான், தொடர்ந்தாட விடுதல் என்கிறார்கள்.

107. தொடர்ந்தாட விடுதலுக்கென்று, போட்டி ஆட்டங்களில், 'ஓட்ட எண்ணிக்கைகளின்' அளவினைக் குறித்திருக்கின்றார்களா? அவைகள் என்னென்ன என்று கூற முடியுமா?

5 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் உள்ள போட்டி ஆட்டத்தில், முதலில் பந்தடித்தாடுகின்ற வாய்ப்பு பெற்று 200 ஓட்டங்கள் அதிகமாக ஒரு குழு எடுத்திருந்தால்;

3 அல்லது 4 நாட்கள் நடக்கின்ற போட்டி ஆட்டத்தில் 150 ஓட்டங்கள் அதிகமாக ஒரு குழு எடுத்திருந்தால்;