பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


போது, அடித்தாடும் ஆட்டக்காரருக்கு (Batsman) இடதுபுறமாக நிற்கும் நடுவரைத் தவிர (Square Leg) மற்ற நடுவர், தனக்கு உரிய வழக்கமாக நிற்கும் இடத்திலிருந்து பந்தெறியாளரின் பக்கம் உள்ள விக்கெட்டுக்குப் பின்புறம் நேரம் முடிவதற்குள் வந்து நின்று கொள்ள வேண்டும்.

115. இந்த முறையை எப்பொழுது பின்பற்ற வேண்டும்?

இவ்வாறு நடுவர் வந்து நின்று கொள்ள வேண்டிய முறையானது, ஆட்டம் முடிவடைகின்ற நேரத்தில் ஆட்டம் இருக்கின்ற நேரம் 2 நிமிடங்கள் என்றிருக்கும் போது, ஒரு பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழந்தார் (Out) அல்லது ஆட இயலாமல் வெளியேறுகின்றார் என்கிற சூழ்நிலையில் தான் பொருந்தும்.

116. ஒரு போட்டி ஆட்டத்தின் கடைசி 1 மணி கால அளவு இருக்கும்பொழுது, நடுவர்களின் கடமை என்ன?

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே, இரு குழுத் தலைவர்களும் ஒத்துக்கொண்டிருக்கும் ஆட்ட நேரத்திற்கேற்ப, ஆட்டம் முடியக்கூடிய இறுதி நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன் கூட்டியே நடுவர்கள் இரு குழுத் தலைவர்களுக்கும் குறித்துக் காட்ட வேண்டும்.

117. அவ்வாறு கூறிய நேரத்திற்குப் பிறகு, ஆட்டம் எப்படி முடிவடையும்?

அந்தக் குறிப்பிட்ட கால அளவிற்குள் ஆட்டம் ஏதாவது ஒரு குழுவிற்கு வெற்றி என்பதாக முடிவடைந்து விட்டால் பரவாயில்லை.