பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


நிலை அமைந்தால், யாராவது ஒரு குழுத் தலைவன் விருப்பப்பட்டு கேட்டுக் கொண்டால், ஒரு ஆட்டக்காரர் ஆட்டமிழந்தாலும்கூட, (out) அந்தப் பந்தெறிதவணையை முடித்து விட்டுத்தான், ஆட்டத்தை முடித்துவிட வேண்டும்.

ஆகவே, நேரம் பார்க்கும் பொழுது, அந்த நிலைமைமையும் அனுசரித்து ஆராய்ந்தே , அப்படி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

121. ஒரு பந்தடி ஆட்டக்காரர் (Bats man) பந்தை உயரமாக அடித்துவிட்டு எதிர் விக்கெட்டை அடைந்துவிடுகிறார். ஆனால் அந்தப் பந்தை எதிர்க் குழுவினர் பிடித்துவிடுகிறார் (Catch). அப்படியானால் என்ன முடிவு எடுக்கலாம்?

அவர் ஆட்டமிழக்கிறார் (Out). அவர் எடுத்த ஓட்டம் கணக்கில் சேராது. ஏனெனில், அவரே ஆட்டத்தை இழந்துவிட்டிருக்கிற பொழுது, அவர் எடுத்த ஓட்டம் எப்படி கணக்கில் சேரும்?

122. ஒரு பந்தெறியாளர் (Bowler) முறையிலா பந்தெறி அல்லது எட்டாப் பந்தெறி என்று எறிகிறார் என்றால், அதையும் பந்தெறி தவணையில் ஒரு எறியாகக் கணக்கிடப்படுமா?

கணக்கிடப்படாது. அதற்குரிய தண்டனையாகத்தான் ஒரு 'ஓட்டம் அல்லது அடித்தாடுவோரின் ஆட்டத்திற்கேற்ப, எடுக்கின்ற ஓட்டங்கள் என்று கிடைத்து விடுகிறதே! ஆகவே, அந்த எறி கணக்கிப்படாமல், முறையாக எறிகின்ற 6 பந்தெறிகள் தான் ஒரு பந்தெறித் தவணையாகக் கொள்ளப்படுகிறது.