பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


அவர் உடையில் பட்டு, பந்து தேங்கி நின்றால் அது நிலைப் பந்தாகும். அவர் மேல் பட்டால், நிலைப் பந்தாகாது.

129. ஒருவர் நடுவராக விரும்புகிறார். அவ்வாறு வர விரும்புகிறவருக்கு, நடுவருக்குரிய தகுதிகள் என்று என்னென்ன இருக்கவேண்டும்?

கிரிக்கெட் நடுவருக்குரிய கடமைகள், மிகவும் முக்கியமான பொறுப்புக்கள் நிறைந்தவைகளாகும். அவர் தனது கடமையை திறம்பட ஆற் வேண்டுமானால், அவர் தன்னை முழுதும் தகுதி உள்ளவராக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு சில குறிப்புக்களைக் கூறுவார்கள்.

கூர்மையான பார்வை, விதிகளை கசடறக் கற்றுத் தெளிந்திருக்கும் ஞானம்; நல்ல செவிமடுக்கும் ஆற்றல்; ஆட்டத்தில் பற்று; விதிகளைப் பின்பற்றி முடிவெடுக்கும் புத்திக் கூர்மை; யாரையும் சார்ந்து நீதி வழங்காத பெருந்தன்மை; ஆழ்ந்து நோக்கி செயல்படுதல் மற்றும் கோபப்படாமல் எதையும் சமாளிக்கும் ஆற்றல்.

இத்தகைய குணநலன்கள் வாய்ந்தவரே, நல்ல நடுவராக விளங்க முடியும்.

130. போட்டி ஆட்டம் தொடங்குவதற்குமுன், நடுவர்களுடைய கடமைகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன?

1. ஆட்டம் தொடங்குவதற்குரிய நேரத்திற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாகவே, மைதானத்திற்கு நடுவர்கள் வந்துவிட வேண்டும்.