பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


2. விக்கெட்டுகள் சரியாகப் பதிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கண்காணித்து, தமது திருப்திக்கேற்றவாறு அமைந்திருக்கின்றனவா என்பதை அறிந்து கொண்டு, ஆவன செய்ய வேண்டும்.

3. ஆட்டத்திற்கு உதவுகின்ற உபகரணங்கள் எல்லாம், ஆட்ட விதிகளுக்கேற்ற முறையில் அமைந்திருக்கின்றனவா என்று பரிசோதித்து அறிந்து கொள்ள வேண்டும்.

4. அன்றைய ஆட்டத்தில், ஏதாவது 'புதிய விதிமுறைகள்' இருக்கின்றனவா என்று தெரிந்து கொள்வதுடன் ஆட்ட நேரம் எவ்வளவு, நண்பகல் உணவு, இடைவேளை போன்ற இடைவேளை நேரங்களை அறிந்து வைத்துக் கொள்ளவேண்டும்.

5. கால நேரத்தைக் கடைபிடிக்க, எந்தக் கடிகாரம் பின்பற்றப்படுகிறது என்பதை அவர்களுக்குள்ளே கலந்தாலோசித்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். அது எந்தக் கடிகாரம் என்பதைக் குழுத் தலைவர்களுக்கும் கூற வேண்டும்.

6. ஆடுகள மைதானத்தின் தன்மையை ஆராய்ந்து, ஆடுதற்கேற்றத் தகுதியுடன் இருக்கின்றதா என்பதுடன், அன்றைய காற்று நிலை, ஒளி நிலை மற்றும் ஆட்டத்தை ஆடவிடாது செய்கின்ற இயற்கை நிலையினையும் பற்றித் தெளிவான கருத்துடன் திகழ வேண்டும்.

7. என்னென்ன செய்ய வேண்டும், எப்படி எப்படியெல்லாம் முடிவெடுக்க வேண்டும் என்று இக்கட்டான சூழ்நிலைகளின் தன்மையை முன்கூட்டியே உணர்ந்து, முடிவெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.