பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


பான்களைத் தட்டிவிட்டாரா, அடித்தாடும் ஆட்டக்காரர் உரிய நேரத்திற்குள் ஓடி வந்து விட்டாரா என்பன போன்ற நிகழ்ச்சிகளை, எந்த இடத்தில் நின்று பார்த்தால் தெளிவாகத் தெரியும், சரியாகக் காண முடியும் என்று ஒரு இடத்தில் நின்று பார்க்க வேண்டும். அது, அனுபவத்தின் மூலமே பெற முடியும்.

இனி, மறு விக்கெட்டின் இடப்புறம் நின்றிருக்கும் நடுவரின் பணிகளைக் காண்போம். (Square leg umplre).

1. முறையிலா பந்தெறியைக் கண்காணித்தல்.

2. அடித்தாடும் ஆட்டக்காரர் தானே தனது விக்கெட்டை வீழ்த்திக் கொண்டாரா (Hit wicket) என்று பார்த்தல்.

3. விக்கெட் காப்பாளர் விதிமுறைக்கேற்ப குறிக்கம்புகளைத் தட்டி வீழ்த்தினாரா (Stumped) என்று பார்த்துக் கொள்ளுதல்.

4. அதற்குள் அடித்தாடும் ஆட்டக்காரர் எல்லைக் கோட்டுக்கு வந்து சேர்ந்தாரா என்று தெரிந்து சொல்லுதல்.

5. ஓட்டத்தில் ஆட்டமிழத்தல் (Run out), குறை ஓட்டம் (Short run) என்பனவற்றைக் கண்டு கொள்ளுதல்.

6. அடித்தாடும் ஆட்டக்காரரின் வலப்புறமிருக்கும் தடுத்தாடும் ஆட்டக்காரர்கள் (Slips), விக்கெட் காப்பாளர் இவர்கள் மிகவும் தாழ்ந்து வருகின்ற பந்தை (Low catches) தரையில் படாமல் பிடித்திருக்கின்றார்களா?

என்பனவற்றை யெல்லாம் நடுத்தன்மையுடன் நடுவர் கவனத்துடன் செயல்பட்டு கண்காணிக்கின்றார்.