பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

133. போட்டி ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்போது நடுவர்களை மாற்றி, வேறு நடுவர்களை அமர்த்த முடியுமா?

இரு குழுத் தலைவர்களின் சம்மதம் இன்றி ஆட்ட நேரத்தின்போது, எந்த நடுவரையும் மாற்றி விட முடியாது.

134. ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, நடுவர்களின் பணிகள் என்ன?

மேலே கூறியவைகள் அனைத்தும், நடுவர்களின் பணிகள் தான். அவைகளுடன், இவைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்

பந்தாடும் தரைப் பகுதியை (Pitch) உருட்டிப் பக்குவப்படுத்துவதை அவர்கள் மேற்பார்வையிட வேண்டும்.

ஆட்டமிழந்து வெளியே போகின்ற அடித்தாடும் ஆட்டக்காரருக்குப் பதிலாக, புதிதாக வருபவர் 2 நிமிடங்களுக்குள் வருகிறாரா என்பதையும், முறை ஆட்டங்களுக்கிடையில் (Innings) உள்ள இடைவேளை நேரம் 10 நிமிடங்களுக்கு மேலே போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு முறை ஆட்டம் முடிந்தபிறகு, தங்களுக்குள்ளே விக்கெட் இருக்கும் பக்கத்தை மாற்றி நின்று கொண்டு கண்காணிப்பார்கள்

முறையில்லாத தவறான ஆட்டம் எந்த சமயத்திலும் நிகழாமல் பார்த்துக் கொள்வார்கள்.

135. முறைகேடான ஆட்டம் அல்லது தவறான ஆட்டம் {Wrong Play) என்று விதிமுறைகள் எவை எவற்றைக் குறித்துக் காட்டுகின்றன?