பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


தனியாகவே சென்று, மைதானத்தின் நிலையினை ஆராய்ந்து, ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா, தெளிவான நிலை தோன்றியிருக்கிறதா, (Improvement) என்பதையும் தெரிந்து, அதற்கேற்றவாறு முடிவினை எடுப்பார்கள்.

அதேபோல், இடைவேளை நேரங்களிலும் மைதானத்தை சோதனை செய்தும் அவர்கள் ஆய்ந்து பரிசீலிக்க வேண்டும்.

144. நடுவர்கள் முடிவினை குழுத்தலைவர்கள் ஏற்கத்தான் வேண்டுமா?

ஆமாம். நடுவர்களின் முடிவு தெரிந்தவுடன், ஆடித்தான் ஆகவேண்டும் என்று இரு குழுக்களின் பொறுப்பாளர்கள், தங்கள் ஆட்டக்காரர்களை உடனே, ஆட்டத்தைத் தொடங்கி வைக்க அழைக்க வேண்டும்.

145. பந்தடித்தாடும் ஒரு ஆட்டக்காரர் ஆட்டமிழந்தார் (Out) என்று தடுத்தாடும் ஆட்டக்காரர்கள், நடுவரிடம் எப்பொழுது முறையிடவேண்டும்?

அடுத்த பந்து எறிவதற்குமுன் (Next ball delivery) அல்லது ஆட்டம் முடிந்து விட்டது (time) என்று நடுவர் அறிவிக்குமுன், எதிர்க் குழு ஆட்டக்காரர்கள் நடுவரிடம் முறையிட (appeal) வேண்டும்.

146. அப்பொழுது எந்த நடுவர் தீர்ப்பளிக்க வேண்டும்? அந்த சமயத்தில் நடுவரின் கடமை என்ன?

பந்தெறியும் விக்கெட் பக்கத்தில் நிற்கும் நடுவரே, எல்லா முறையீடுகளுக்கும் பதில் கூற வேண்டும். அதாவது, தானே தன் விக்கெட்டை