பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


150. ஒருவர் ஆட்டமிழந்தார் (Out) என்பதை நடுவர் எவ்வாறு சைகைமூலம் காட்டுகிறார்?

நடுவர் தனது ஆள் காட்டும் சுட்டு விரலைக் (index finger) தலைக்கு மேலே கொண்டு சென்று உயர்த்திக் காட்டுவதன் மூலம் சைகை காட்டுகிறார்.

அவர் ஆட்டமிழக்கவில்லை என்றால், அவர் ஆட்டமிழக்கவில்லை என்றே வாயால் கூறிவிடுகிறார்.

151. தான் ஒரு முடிவை எடுக்கும் முன், இன்னொரு நடுவரிடம் கேட்டுத்தான் அந்த முடிவை சொல்ல வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா?

அந்த நடுவர் தன்னைவிட ஒரு சிறந்த இடத்திலிருந்து கண்காணித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும், தான் அடுத்த நடுவரிடம் கேட்டுத்தான் அதாவது கலந்தாலோசித்துத்தான் முடிவினைத் தரவேண்டும் என்று விதிகள் நடுவரைத் தடுக்கவில்லை.