பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வேதநாயகம் பிள்ளை


கதாநாயகனாகிய பிரதாபனது கள்ளங் கபடமற்ற உள்ளம் நம் கருத்தை அள்ளுகின்றது. அவன் தாயாகிய சுந்தரமும், மனையாளாகிய ஞானாம்பாளும் மதிநலம் வாய்ந்த மங்கையர் குலத்திற்கு அணிகலன்களாக விளங்குகின்றார்கள். சுருங்கச் சொல்லின் அந் நவீனம் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் கதையாகும். அக் கதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டிருப்பதாகத் தெரிகின்றது[1].

பதினைந்து ஆண்டுகள் வேதநாயகர் முனிசீபாக வேலை பார்த்தார் ; அவ்வேலையின் கடுமையால் உடல் தளர்ந்தார்; அரசியலார் அனுமதி பெற்று வேலையினின்று விலகினார் ; பின்பு தமிழ்க் கலைகளிலே பொழுது போக்கினார். மாயூரம் நகர சபைத் தலைவராக அமர்ந்து நற்பணிகள் பல செய்தார்; ஞானசுந்தரி என்னும் நாவலும் இயற்றி வெளியிட்டார்; கடைசியாக "சத்திய வேத கீர்த்தனை“ என்னும் இசைப் பாட்டியற்றி அறுபத்தைந்தாம் வயதில் ஆண்டவன் அருளிலே கலந்தார்.


  1. I wish he could have lived to have seen Pratapa Mudaliar in English (the first hundred pages of which are now printed) Mr. G. Mackenzie Cobban's letter dated 26th July 1889 to Vedanayagam's son— Pratapa Mudaliar Charitram, Īrth edition, Ap.p. 5.