பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நிறுத்திக் கீழே தள்ளி விடுவார்கள். அறிவுள்ள அரசன், தன் முதுகில் பாராசூட்டை யாருக்கும் தெரியாமல் கட்டிக்கொண்டு மலையிலிருந்து கீழே விழும்போது, தப்பித்துக்கொண்டு விடுவான். ஆகவே மரண தண்டனை நிச்சயம் என்று தெரிந்தும் வீரர்கள் போட்டியிட்டனர்.

ஆனால், 49 அல்லது 50 முழு நிலாக் காலத்திற்குப் பிறகு, ராணியானவள் கணவன்மார்களை மாற்றிக் கொண்டேயிருந்தாள். ஆமாம், அவளிருக்கும் காலம் வரை அவளே ராணி. நம் புராணத்தில் கூட, இந்திரனாக யார் வந்தாலும், இந்திராணி ஒருத்தியே இருப்பாள் என்று இருக்கிறதே! அதே போல்தான்.

அந்தக் கால வரையறைதான் (49 அல்லது 50 பெளர்ணமி காலம்) 48 மாதங்கள் கிட்டத்தட்ட ஆகிறது. என்ற அடிப்படையில் நான்காண்டுகள் என்று முடிவு கட்டியிருக்கின்றனர். அத்துடன், நான்கு ஆண்டுகளுக்கு மேல், ஓர் ஆண் மகனால் உடல் திறனை முன்போல கட்டிக் காத்துக் கொண்டிருக்க முடியாது என்ற நம்பிக்கையில்தான், நான் காண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பந்தயம் நடந்திருக்கிறது.

இந்தக் கதை உண்மையோ அல்லது கட்டுக்கதையோ, நமக்குத் தெரியாது. இருந்தாலும், ஒரு மனிதனின் ஆற்றல் நான்காண்டுகள் வரைதான் இருக்கும். இதற்குப் பிறகு குறையும் என்ற உடல் தத்துவ ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து கிரேக்கர்கள் இந்தப் பந்தயத்தை நடத்தி மகிழ்ந்தனர் என்பது பொருந்தும்.

ஆனால், மிலோவோ, இருபத்தி நான்கு ஆண்டுகள் தன் தேகத்திறனில் கிஞ்சித்தும் குறையாமல், வெஞ்சமர் புரிந்து வெல்லும் அஞ்சா நெஞ்சினனாக, ஆற்றல் மிகுமறவனாக வாழ்ந்திருக்கின்றான். அத்தகைய ஆற்றல்