பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஒலிம்பிக் போட்டியில் இததான் முதல்தடவையாக, போட்டியில்லாமல் ஒருவனுக்கு வெற்றி போய்ச் சேர்ந்தது. டிராமியஸ் என்பவன் வெற்றி வீரனாக அறிவிக்கப்பட்டான். ஒலிம்பிக்கில் போட்டியிடாமல் வெற்றி பெற்ற முதல் வீரன் என்ற பெருமையையும் பெற்றான்.

இவ்வாறு நடைபெற்ற துரோக நிகழ்ச்சியைக் கண்டு ஒலிம்பிக் அதிகாரிகள் ஒருமித்த ஆத்திரம் அடைந்தனர். அப்பொழுதேதியரஜனிசை அழைத்து விசாரனை நடத்தினர். ஒலிம்பிக் போட்டியானது, சிறப்பு மிக்க சீயஸ் கடவுளின் பெருமைக்காக நடத்தப்படுவதால், அதற்கு இழுக்குத் தேடித் தந்தவனை தகுந்த முறையில் தண்டித்துவிடத் தீர்மானித்தனர்.

கண்ணைப்போல் போற்றும் கடவுளை அவமதித்தற்கு ஓர் அபராதம். ஒப்பற்ற ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நிர்வாகத்தை நிலைகுலைய வைத்த செயலுக்காக இன்னொரு அபராதம். குத்துச்சண்டைப் போட்டியில் முறையற்ற கடுமையான முறைகளில் ஈதிமஸ் என்பவனைத் தாக்கிக் காயப்படுத்தியதால் அதற்கும் ஒரு அபராதம் என்று பல்முனைத்தாக்குதல் என்பது போல, ஒலிம்பிக் நிர்வாகத்தினர் அபராதத் தொகையை மிகுதிப்படுத்திக் காட்டினர்.

இவ்வாறு அபராதத்தை கடுமையாக விதித்ததால், தியாஜனிசை இனிமேல் குத்துச்சண்டையில் பங்கு பெறாமல் தடுத்துவிட வேண்டும், என்பதுதான் அவர்களது ரகசியத் திட்டமாக அமைந்திருந்ததுபோலும், அவர்கள் நினைத்தது ஒன்று. ஆனால் நடந்ததோ வேறு.

எவ்வாறோ அபராத தொகையை சரிசெய்து, கடவுளுக்கான அபராதத் தொகையையும், நிர்வாகத்திற்கான அபராதத்தையும் கட்டிவிட்டான் தியாஜனிஸ். ஆனால்,