116
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
தாசஸ் நகரத்தினர் அவனைப்போல சிலை ஒன்றையும் செய்து நிறுவினர். தனக்கும் சிலை என்றதும், தியாஜனிசுக்குத் தலை கால் புரியவில்லை.
கருத்துக் குழப்பம் மிகுதியாகும் அளவிற்கு தியாஜனிஸ் நினைவில் கர்வம் பெருக்கெடுத்தோடி விட்டது. தன்னை மனிதப் பிறவி என்பதையே அது மறக்கடித்துவிட்டது. தன்னை மகேசன் பரம்பரை என்று மார்தட்டிப் பேசும் அளவுக்குக் கொண்டு சென்று விட்டது. அவனது டமார வாயும் அடிக்கடி அலற ஆரம்பித்து விட்டது.
ஆமாம், அவன் தன்னைப்பற்றி உயர்வாகப் பறைசாற்றத் தொடங்கினான். ஹிராகிலிஸ் எனும் தெய்வம் வாழும் கோயிலில் பூசாரியாக வேலை செய்யும் மனிதரின் மகனல்ல நான், நான் கடவுளின் குமாரன் என்றான்.
ஆகவே, ஒரு குட்டிக் கடவுளுக்குரிய சகல விதமான பூசைகளும், புனிதச் சடங்குகளும், மரியாதையும் எனக்கு நீங்கள் செய்திடவேண்டும் என்று மக்களிடம் முதலில் வாதாடத் தொடங்கினான், பிறகு அனைவரையும் வம்பிழுக்கத் தொடங்கியும் விட்டான்.
ஒரு முறை கோயில் திருவிழா ஒன்று நடந்து கொண்டிருக்கும் பொழுது, தனக்குரிய உன்னதமான கௌரவம் தனக்குத் தரப்படவில்லையென்று கலாட்டாவே செய்தான் என்று புளூடார்ச் எனும் ஆசிரியர் குறித்துக் காட்டுகின்றார்.
இப்படி தரம் மாறிப் போன தியாஜனிசுக்கு, அநேக விரோதிகள் அவனைச்சுற்றி எப்பொழுதும் இருந்தார்கள் என்பது உண்மைதான். என்றாலும், அவனை எதிர்த்திட யாருக்கும் தைரியமே இல்லை.
இவ்வாறு வாழ்நாள் முழுவதும் வரட்டு ஜம்பத்திலும் அதே சமயத்திலும் வல்லமை நிறைந்தவனாகவும் இருந்து,