பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆதிகாலத்தில், அறிவுத் தெளிவு ஏற்பட்ட காலத்திலிருந்த மக்களுக்கு, அதாவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழிபாடு செய்வதிலே விருப்பம் ஏற்பட்டது. யாரை?

தங்களைவிட எல்லாவற்றிலும் சிறந்தவராக உள்ளவருக்கு, அல்லது யார்வது தாங்கள் விரும்பும் ஒருவருக்கு மரியாதை செலுத்துகின்ற மனோபாவத்தின் தொடக்கமே, இப்படி வழிபாட்டு மரபாக மலர்ந்து வந்தது. அக்காலத்து மக்கள், தாங்கள் வணங்கி வழிபட வேண்டும் என்ற ஓர் உள்உணர்வின் வெளிப்பாடாகவே இந்த வழிபாட்டு முறை வளர்ந்து மிகுதியாகவும் தொடங்கியது.

அறிவுவளர்ச்சியும் அனுபவ முதிர்ச்சியும் மக்களிடையே முகிழ்த்தெழுந்த ஒவ்வொரு காலக் கட்டத்திலும், மக்கள் தாங்கள் வணங்க விரும்பியவற்றை, விளக்குவதற்கு முயற்சித்தனர். அதற்காக, படங்கள் மூலமாக எழுதித் தெரியப்படுத்தினர். அந்த உருவத்தையே கடவுள் என்றனர். கடவுள்கள் என்று கற்பித்தனர்.

இக்காலத்து மக்கள் இப்படிப்பட்ட கடவுளர்களை ஏற்க மறுத்து ஏதோதோ காரணங்களைக் கூறி மறுப்பார்கள். வெறுப்பார்கள். அக்கால கடவுளர்கள் மக்களைக் கவர்ந்த ஒரு தலைவர், அல்லது தனிப்பட்ட ஒரு மனிதர் என்பதாகவும் விளக்கம் கூறுவார்கள். எப்படியிருந்தாலும், அக்கால மக்களிடையே கடவுள் என்றும், வழிபாடு என்றும், மரபு என்றும் பல்வேறு நிலையில் வளர்ச்சியுற்ற வழக்கங்கள் நிறைந்து தொடர்ந்து வந்து விட்டன. மனிதரிடையே நிறைந்து விட்டன.

மதமும் வாழ்க்கையும்

எல்லா நாட்டு மக்களுக்கும், வேறுபட்ட இனத்தவர்க்கும் மதமானது.அதாவது வழிபாட்டு வழக்கமானது, வாழ்க்கையின்