பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அவர்கள் புகழ்ந்தால் போதுமா? அரசாங்கம் அதனைப் பார்த்துக்கொண்டு வாளா இருக்கமுடியுமா?

ஓருயிரைப் போக்குகின்ற எந்த ஜீவனுக்கும் அல்லது எந்தப் பொருளுக்கும் சரியான தண்டனையை நல்கிட வேண்டும் என்பதே அந்தக் காலத்தில் அந்நாட்டின் சட்டமாக இருந்தது. அதன்படி, ஓர் மனித உயிரைக் கொல்லக் காரணமாக இருந்த சிலைக்கும் உரிய தண்டனை தந்தாக வேண்டும் என்று அரசு சார்பில் உறுதியாயிற்று.

அந்தத் தீர்ப்பின்படி, கப்பல் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டு, நடுக்கடலில் தூக்கியெறியப்பட்டது கொலைகார தியாஜனிஸ் சிலை.

சிலையின் சிறப்பு மேலும் பெருகுவது போல பல சம்பவங்கள் அதற்குப்பிறகு தோன்றின. தியாஜனிஸின் பேர் ராசிக்கு இன்னும் உயிர் இருந்தது போலும்! அது வேலை செய்யத் தொடங்கிற்று.

தியாஜனிஸ் வாழ்ந்த நகரமான தாசஸ் நகரத்தில் பஞ்சம் பெருகியது. பயிர்கள் விளைச்சலிழந்தன. நாடே வறுமையில் உழலத் தொடங்கியது. மருண்ட மக்கள், வேறு வழி அறியாது டெல்பி (Delphi) எனும் இடத்திற்குச் சென்று அருள்வாக்குக் கேட்க நின்றார்கள். அப்பொழுது அசரீரி (Oracle) ஒன்று எழுந்தது.

தாசஸ் நகரத்து அதிகாரிகள், தங்கள் அரசியல் எதிரிகளை எல்லாம் திரும்பவும் அழைத்துக்கொள்ள வேண்டும் என்று அசரீ ஆணையிட்டது.

அஞ்சிக் கொண்டிருந்த அதிகாரிகள் அந்த ஆணைக்கு அடங்கினர். அதன்படி எதிரிகளை அழைத்து அரவணைத்துக் கொண்டனர். என்றாலும் பஞ்சம்போன பாடில்லை. பழைய