128
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
வீரனிடம் பொலிடாமஸ் தோற்றுப்போனான். சிங்கத்தைக் கொன்றவன். பாரசீக வீரர்களை வென்றவன். புரோமாகஸ் எனும் வீரனிடம் தோற்றுப் போனானே என்றாலும், பொலிடாமசின் வீரம் பழுதுபட்டுப் போகவில்லை. பாழாகி விடவில்லை; வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு இரு கண்கள் போன்றவைதானே. பொலிடாமசும் வீரத்துடனே தோல்வியை ஏற்றுக் கொண்டான்.
இத்தகைய ஆற்றல்மிக்க வீரனின் மரணமும் மிலோவின் மரணம் போலவே, வீரமரணமாக அதாவது வலிமை மிக்க மரணமாகவே அமைந்துவிட்டிருந்தது.
ஒருநாள், பொலிடாமஸ் தன் நண்பர்களுடன் நிழலுக்காக ஒரு குகையில் தங்கியிருந்த பொழுது, குகையின் மேற்கூரையானது சரிந்து விழத் தொடங்கியது. பயந்து அலறிய நண்பர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சரிந்த பாறையினை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டான் பொலிடாமஸ்.
அவசர அவசரமாக அவனது நண்பர்கள் குகையை விட்டு வெளியேறினர். ஆனால், கூரையின் பாரம் தாங்க முடியாமல், பொலிடாமஸ் அந்தக் குகைக்குள்ளேயே நசுங்கி செத்துப் போனான்.
வீரர்கள் சாதாரணமாக இறப்பதில்லை. வீரமரணமே எய்துவார்கள் என்ற நெறியை இதுவரை நாம் படித்த எல்லா கதைகளுமே வலியுறுத்திக் கொண்டேதான் வருகின்றன. பொலிடாமஸ் கதையும் அது போலவே அமைந்திருக்கிறது. வியப்பில்லையே!