பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


டோரியஸ் ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கு பெற்று, வெற்றியடைந்து, ஏதென்ஸ் நாட்டுக்குப் புகழ் தேடித்தந்தான் என்ற ஒரே காரணத்திற்காக, அவன் மரண தண்டனையை ரத்து செய்தார்கள், மரணத்தின் கோரப்பிடியிலிருந்து விடுதலையடைந்தான் டோரியஸ்.

இதற்கிடையில் ஏதென்ஸுக்கும் ஸ்பார்ட்டாவுக்கும் நடைபெற்ற போரில், ஸ்பார்ட்டா வெற்றி பெற்றது. ஸ்பார்ட்டாவின் கீழ் ஏதென்ஸ் வந்து விட்டது. எந்தச் சண்டையிலும் கலந்து கொள்ளாமல் டோரியஸ் இருந்தபோது, ஸ்பார்ட்டா அரசால் கைது செய்யப்பட்டான். குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு மரண தண்டனைக்குள்ளானான்.

மனிதாபிமானம் நிறைந்த விதியானது, அவனது மரண தண்டனையை மாற்றி வைத்தது. ஆனால் டோரியசின் தலைவிதி, அவனை வாழவிடவில்லை. மரண தண்டனையாலேயே உயிரை இழந்தான். ஆற்றங்கரையின் மரமும், அரசனறிய வாழ்கின்ற மக்கள் வாழ்வும் எப்பொழுதும் ஆபத்துக்குள்ளாகும் என்பது பழந்தமிழ் பாட்டன்றோ! ஆற்றங்கரையில் இருக்கின்ற மரம் அடி பெயர்ந்து விழுந்ததுபோல, அரசுக்குத் தெரிந்த புகழ்பெற்று வாழ்ந்த டோரியஸ், விதியால் வீழ்ந்தான் என்றாலும் வரலாறு அவனை மறக்காமல் வாழ வைத்திருக்கிறது.