பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

13


பிறகு, தியாமட் தனது தாயின் தளபதியாக விளங்கிய கிங்கு (Kingu) என்பவனையும் கொன்று, அவனிடமிருந்த மந்திர மாத்திரையைப் பெற்றான். அதன் மகத்துவம் என்ன வென்றால், எல்லா உயிரினங்களையும் கட்டுப் படுத்தக் கூடிய ஆற்றல் அதற்கு இருப்பதுதான்.

மார்டக்கின் தந்தையின் பெயர் என்கி (Enki) என்கிற இயா அவர் அந்த கிங்குவின் இரத்தத்தால் மனிதனைப் படைக்குமாறு ஆலோசனை அளித்தார்.

அப்படி மனிதனைப் படைத்தான் மார்டக். அந்த மனிதனுக்கு உரிய வேலையானது, தேவர்களுக்கு உண்ண உணவும் குடிக்க பானமும் பூமியில் விளைவிக்கிற வேலையாகும். இதனால், கடவுள்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்று நம்பினர்.

இப்படியாக, மார்டக், கடவுள்களின் தலைவனாக உயர்ந்தான். பாபிலோனில் பிரசித்திப் பெற்றான்.

பாபிலோனில் மனிதன் படைக்கப்பட்ட கதை இப்படிப்பாட்டாகப் பாடப்பட்டது (கி.மு.1000) என்றால், கி.மு.1635-ல் இன்னொரு படைப்புக் கதை அங்கே ஆரவாரத்துடன் எழுந்தது.

இதுவும் பாபிலோனிய நாட்டில் தான், அங்கு எழுந்த அட்ராசிஸ் இதிகாசத்தில் எழுதப்பட்டுள்ள கதை.

மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பாகவே, கடவுள்கள் இருந்ததாக, இந்தக்கதை தொடங்குகிறது.

கடவுளர்களுக்குக் கால்வாய்கள் தோண்டுவதும், மண்ணைக் கிளறுவதும் போன்ற வேலைகளை மிகுதியாக இருந்தன. அந்த வேலைகள் அவர்களுக்குக் கடுமையாகவும், மிகக் கொடுமையாகவும் இருந்ததால், வேலை செய்ய