பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


விருப்பமில்லாமலும், வெறுப்போடும் ஒன்று கூடினர். வேலை நிறுத்தம் செய்தனர் (Strike).

அத்துடன் நின்று விடாமல், என்லில் (Enlil) எனும் மண்ணாளும் கடவுளின் வீட்டை எரித்துத் தள்ளினர்.

இந்த என்லில் என்பது யார் என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம் பாபிலோனியர்களின் மதத்தில், உள்ள தலைமைக் கடவுளின் பெயர் அனு (Anu) இந்தக் கடவுளின் ஒரே மகன் என்லில்.

தந்தை அனுவோ விண்ணுலகத்திற்கு அதிபதி என்லிலோ மண்ணுலகிற்கு அதிபதி.

மண்ணுலகில் இருந்து வேலை செய்து வந்த கடவுள்கள் வெறுப்புற்று, வீட்டை எரிக்க வந்தனர், அந்தக் கூட்டத்தைக் கண்ட என்லில், விண்ணுலகிலிருந்த தன் தந்தையிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டான். அதன்படி, வேலை நிறுத்தம் செய்து, கூட்டத்தை வழிநடத்தி வருகிற தலைவனைக் கொன்று விடவேண்டும் என்பது தான் அந்தக்கட்டளை.

அப்படியே, வேலை நிறுத்தத் தலைவனைக் கொன்று விட்டு, அவனுக்குப் பதிலாக, ஒரு மனிதனை (Man) வேலை செய்கிற மாற்றாளாகப் படைக்க வேண்டும் என்ற கட்டளையும் வந்து சேர்ந்தது.

வேலை நிறுத்தம் செய்த தலைவனைக் கொன்று அவனுடைய தசைகள் இரத்தத்துடன், களிமண்ணையும் சேர்த்துப் பிசைந்து, மனிதன் உருவாக்கப்பட்டான். பின்னர் அந்த மனிதனோ, வேலைசெய்யும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டான். வேலைகளை மனிதன் தொடர, கடவுள்கள் ஓய்வு பெற்றுக் கொண்டார்கள் என்ற கதை இதோடு நின்றுவிடவில்லை.