பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலம்பிக் பந்தயங்கள்

29




4.மக்களும் விழாக்களும்

மக்கள் மதங்களை மனப்பூர்வமாக விரும்பினார்கள். விரும்பியதுடன் நில்லாது. வெறித் தனமாக பின்பற்றினர். அதன் விளைவுதான் வீணான நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டது.

உடைகளைக் கிழித்து, உடலை அழுக்காக்கி, வெறுக்கத்தக்க அளவில் செயல்பாடுகளை வளர்த்து, தங்களது மத அபிமானங்களை மற்றவர்களுக்குக் காட்டிக் கொண்டனர். அபிமானங்களால் ஏற்படுகிற காரியங்களை, அவர்கள் அவமானங்களாக ஏற்றுக் கொள்ள வில்லை.

மதம் மனதோடு இருக்க வேண்டும். செயல்கள் செம்மையாக சீரான வழிகளில் நடக்க வேண்டும். வீணான வெறி வேண்டாம். அன்பே அருமையான வழி என்று அன்று ஏசுபிரான் போதித்தார். யாரும் ஏற்கவில்லை.

வெளிப்புற ஆடம்பரமும், கேவலமான நடத்தைகளும் பக்தியல்ல. இருதயத்தின் இதமான மாற்றமே, உண்மையான பக்தி என்று, மகான்கள் போதித்ததை, மக்கள் கேட்டார்கள். ஆனால், பின்பற்றத்தான் இல்லை.

மதமும் விழாவும்

தனிப்பட்டவர்கள் தன்னந்தனியாக இருந்து கடவுளை வணங்கினால், அதனை ஜெபம் என்றனர். சிலர் தொழுகை என்றனர், வேறு சிலர் வழிபாடு என்றனர்.

அதையே மக்கள் கூட்டங்கூட்டமாகக் கூடி, கடவுளைக் கும்பிடுகிறபோது, விழா என்றனர். மதவிழா என்றனர்.