பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

85


காக்கப்பட்ட சீயஸ் சிலை, பந்தயம் நிறுத்தப்பட்ட மறு ஆண்டே (கி.மு. 339) உடைக்கப்பட்டது.

விழா நிறுத்தப் பெற்ற பிறகு, நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், இப்படி ஒரு அதிசயமான பந்தயம் அவனியிலே இருந்ததா என்று எல்லோரும் ஆச்சரியத்துடன் கேட்குமளவுக்கு, மறையத் தொடங்கின. கோதர்கள் (Coths) அடிக்கடி படையெடுத்து வந்து கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள்.

இவ்வாறு அந்நியப் படையெடுப்பால், ஒலிம்பியா அவதிப்பட்டபொழுது, ரோமை ஆண்ட மன்னன் இரண்டாம் தியோடசிஸ் இட்ட ஆணையால், எல்லாக் கோயில்களும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. கண்ணுக்குத் தோன்றக்கூடிய சான்றுகள் எல்லாம் காவலர்களால் அழிக்கப்பட்டன.

கோயில்கள் மட்டும் இடிபடவில்லை கோயிலின் முன்னே அமைந்திருந்த சுற்றுச் சுவர்கள் அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்குமாறு மன்னன் கொடுத்த கட்டளை சிறப்பாக நடந்தேறியது. 45000, 50000 மக்களுக்கு மேல் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கும் அளவுக்குச் சுற்றி வளைத்துக் கட்டப்பட்ட ஒலிம்பிக் பந்தய மைதானமும், அதனைச் சார்ந்த மதில்சுவர்களும் மண்மேடாயின.

இந்தக் கொடுமையைக் கண்ட இயற்கைக்கே பொறுக்கவில்லை போலும், தானும் தன் கை வரிசையைக் காட்டத் தொடங்கியது, சீயஸ் கோயிலை நெருப்பு எரித்துப் பொசுக்கியது.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அங்கே எழுந்த பூகம்பத்தால், எஞ்சியிருந்த இடங்களும், மறைந்தொழிந்து மண்ணுள் அடங்கின. சுவடே இல்லை. சான்றுகள் எங்கே