கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்
87
உலக நாடுகளுக்கிடையே ஒப்பற்ற முறையிலே நடக்கின்ற விளையாட்டுப்போட்டிகளை, ஒலிம்பிக் பந்தயங்கள் என்று அழைக்கிறோம். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, உலக நாடுகளில் விரும்பி ஏற்று நடத்த விரும்புகின்ற ஒரு நாட்டில், பதினாறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகின்ற போட்டிகள் உலக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
விளையாட்டு வீரர்களின் விழுமிய புகழுக்கு முத்தாய்ப்பான வாய்ப்பை வழங்கும் ஒலிம்பிக் பந்தயங்களை, புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் என்று அழைக்கின்றார்கள்.
அப்படியென்றால், பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் என்று ஒன்று இருந்திருக்க வேண்டும் விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்ற சுவையான சம்பவங்களும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றதல்லவா!
ஆமாம்! பழைய ஒலிம்பிக் பந்தயங்களை பிரபலமாக நடத்திப் பெருமை பெற்ற நாடாகத் திகழ்ந்தது கிரேக்க நாடாகும். உடல் வலிமைக்கும், வனப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதனை மத விழாவாக, வீர விழாவாக நடத்தி வெற்றிகரமாக வாழ்ந்திருந்த நாடு கிரேக்க நாடாகும்.
ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெறுவதற்காக உவப்புடன் முன் வந்த வீரர்களை, விழா நடத்தும், விழாக் குழுவினர் எத்தகைய கடுமையான விதி முறைகளுடன் வரவேற்றனர், வழிப்படுத்தினர், விளையாட அனுமதித்தனர்,