பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கொடுமையாகத் தண்டித்தனர் என்றெல்லாம் அறிகின்ற பொழுது, கிரேக்கர்கள் நடத்திய கீர்த்தி மிகு விழாவான ஒலிம்பிக் பந்தயங்களை, தங்கள் உயிரினும் மேலாக நேசித்தனர் என்பதையே நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்ள விரும்புகின்ற வீரன் ஒருவன், கலப்பற்ற தூய கிரேக்கனாக இருக்க வேண்டும் என்பது முதல் விதி.

அவன் திருமணம் ஆகாதவனாக, எந்த குற்றவாளிப் பட்டியலிலும் இல்லாதவனாக, இருக்கவேண்டும் என்பது அடுத்த விதி, அதிலும், அவன் பந்தயங்களில் கலந்து கொள்ள விரும்பி மனுச்செய்து கொண்ட பிறகு, கலே நாடிகை எனும் குழுவால் பரிசீலிக்கப்பட்டுத் தேர்ந் தெடுக்கப்பட்டான். பின்னரே ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டான் என்றும் வரலாறு விரித்துரைக்கின்றது.

வெற்றி பெற்ற வீரன் ஒருவன் கிரேக்கத்திலேயே சிறந்த வீரனாகக் கருதப்பட்டான். அவனை வளர்த்து ஆளாக்கிய நாட்டில் அவன் ஒரு குட்டி தேவதை பெறுகின்ற அத்தனைச் சிறப்பினையும், வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டான். அவன் அழகை சிலை வடித்தார்கள். பொன்னையும் பொருளையும் பரிசாக அளித்தார்கள் அந்த நாட்டினர்.

எல்லோரும் சென்று வருகின்ற கோட்டை வாயிலில் அவனை சென்று வரவிடாது. கோட்டைச் சுவரை இடித்து அவனுக்கு எனத் தனிவழி அமைத்து ஆரவாரத்துடன் வரவேற்றனர். வாழ்த்தினர். வணங்கினர் என்று வரலாறு புகழ் பாடுகின்றது.