பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கொண்டான். அந்தப் பணியை சிறப்பாகச் செய்ய முடியாது என்பது அரசனின் வாதம். செய்து முடித்துவிடுவேன் என்பது ஹிராகிலிசின் எதிர்வாதம். முடிவு!

இருவருக்கும் போட்டியே வந்து விட்டது. ஹிராகிலிஸ் குதிரை லாயத்தை ஒழுங்காகக் கழுவித் தூய்மைப் படுத்தி விட்டால், மொத்த மந்தையில் பத்தில் ஒரு பகுதியை ஹிராகிலிசுக்கு மன்னன் தந்து விட வேண்டும் என்பது போட்டியின் நிபந்தனை. ஹிராகிலிசால் முடியாது என்ற நம்பிக்கையில் மன்னன் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். பணி தொடங்கிவிட்டது.

ஹிராகிலிசுக்கும் தேவ வல்லமை உண்டல்லவா? ஆகவே, அவன் ஒரு சாரியத்தைக் குறுக்கு வழியில் ஆற்றத் தொடங்கினான். வேறொன்றுமில்லை. எலிஸ் நகரத்திலே ஓடுகின்ற ஆல்பியஸ் என்ற ஆற்றைத் திருப்பிக் குதிரை லாயத்தில் விட்டு சுத்தமாகக் கழுவி, சுருக்கமாகத் தன் பணியை முடித்துக்கொண்டான்.

எவ்வளவு பெரிய குதிரைக் கொட்டில்! எத்தகைய மாபெரும் வேலை? இவ்வளவு எளிதாக ஆற்றைத் திருப்பிவிட்டு, காரியத்தை முடித்துக் கொண்டானே என்ற கோபம் ஒரு பக்கம்! போட்டியின் நிபந்தனையின் படி, பத்தில் ஒரு பாகம் மந்தைகளைப் பிரித்துத் தர வேண்டுமே என்ற பேரிடி இன்னொரு பக்கம். அரசனாயிற்றே! அநியாயமாக விவாதம் செய்தால் ஆதரிக்க ஆள் இல்லாமலா போகும்!

மன்னன் மறுத்தான், ஹிராகிலிஸ் செய்தது தவறு என்று ஆரவாரம் செய்தான். அங்கு வந்த ஆல்பியஸ் ஆற்றினால் குதிரை லாயம் முழுவதும் நனைந்து, சேறும் சகதியும் போல மாறிவிட்டது. செய்த முறை தவறு. இதற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றெல்லாம் குற்றச்சாட்டுக்களை அள்ளிக் கொட்டினான். வேலை செய்த வீரனால்