பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

97


குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோபத்தின் சிகரமானான்.

வீரனும் மன்னனும் சண்டையில் இறங்கிவிட்டனர். பலவான் யார் என்ற போட்டிச் சண்டையிலே மன்னன் அகசை, மாவீரன் ஹிராகிலிஸ் கொன்று விட்டான். மந்தைகள் முழுவதையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். அதோடு மட்டுமல்ல, மாபெரும் புகழ் வாய்ந்த மணி நாடாகிய எலிஸ் நாட்டிற்கும் தானே மன்னன் என்ற ஓர் அறிக்கையை விடுவித்து, மகுடத்தையும் சூட்டிக்கொண்டான்.

தவறு செய்யப்போய், தண்டனை பெற்றுத்தானே மண்ணுலகத்திற்கு வர நேர்ந்தது! வந்த இடத்திலே இன்னொரு குற்றம். குற்றத்திற்குத்தண்டனை குதிரை லாயம் கழுவுவது. இன்னொரு குற்றத்திற்கு ஏற்றமிகு மன்னன் பதவி, அவனால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை, அவனுக்கென்று மனசாட்சி ஒன்று இருக்கிறதே! குத்திக் காட்ட ஆரம்பித்துவிட்டது.

செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும்! மனதுக்குள்ளே இடிக்கும் மனச் சான்றுக்கு அமைதி கொள்ளுமாறு காரியம் செய்ய வேண்டும்! அதே நேரத்தில் தான் பெற்ற பெற்றியை, தலைமைப் பேற்றைத் தரணிக்கும் உணர்த்தவேண்டுமே! எல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து ஒரு பணியைத் தொடங்கினான். அந்த நிகழ்ச்சிக்கு ஆதாரமாய், அமைந்ததுதான் இந்த ஒலிம்பிக் பந்தயம். ஆகவே ஒலிம்பிக் பந்தயம் ஹிராகிலிஸ் என்பவனால், தன் தந்தை சீயஸ் கடவுளுக்கு, ஒலிம்பியா என்ற இடத்திலேகோயில் கட்டி, தொடங்கப்பெற்றது என்பது புராணக்கதை. கேட்க சுவையாக இருக்கிறதல்லவா?

பல்வேறு புராணக் கதைகள் படிக்கவும் கேட்கவும் சுவையாக இருந்தாலும், உலகத்தில் ஒலிம்பிக் பந்தயம் என்ற