பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95


“உறுபொருள் கொடுத்தும் கற்றல் நன்றே"

என்று கழறுகிறது; வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டா என்றும் கூறுகிறது. ஏதென்ஸ் நகரச் செல்வக்குடியினர் தம் மக்களைத் தனி ஆசிரியர்களிடம் ஒப்படைத்து, அப்பிள்ளைகளின் கல்வி அபிவிருத்திக்கானவற்றைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தனர். அவ்வாசிரியர்கள் தம்மால் ஒப்புவிக்கப்பட்ட பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று, பள்ளி முடிகின்ற வரையில் காத்திருந்து மீண்டும் வீட்டிற்கு மிக எச்சரிக்கையுடன் அழைத்து வருவர். இந்த ஆசிரியர்கள் பிள்ளைகளிள் கல்வி முன்னேற்றத்தைக் குறித்து மட்டும் கவலே எடுத்துக் கொள்ளாது, சிறுவர்களின் பெருந்தன்மையான வாழ்விற்கு வேண்டிய வகை களில், அவர்களைப் பயிற்றுவிக்கும் பொறுப்பையும் ஏற்றவராய்த் திகழ்ந்தனர்.

பொதுவாக ஏதென்ஸ் நகரப் பிள்ளேகளின் படிப்பு ஆருவது வயதில் தொடங்கப்பட்டு பதின்காம் வயது வரையில் நீடிப்பதாகும். இந்த வயதிற்குள் இவர்கள் தம் ஆரம்பப் பள்ளிக்கூடப் பாடத்திட்டங்களை நன்கு பயின்றவர் ஆவர். மாணவ வர் இலக்கணப் பள்ளிக்கூடம் என்று அக்காலத்தில் குறிப்பிடப்பட்ட அப்புள்ளியில், அரக்குப் பலகை யில் இருப்பு எழுதுகோலால் எழுதும் பழக்கத்தை மேற்கொண்டு வந்தனர். நம் கிராமப் பள்ளிகளில் முன்பு மணலில் எழுதி வந்தனர் அன்றோ !

அதன்பின் அவர்கள் சொல்வதைத் தவறின்றிப் பலகையில் எழுதும் பயிற்சிபெற்று விடுகின்றார்கள்.