99
பொருள் பற்றியவையாகும். சொல்மாரி பொழிந்தவர்கள் அவ்வக்கலையில் நன்கு தேர்த்து ஐயந்திரிபறக் கற்றவராதலின், கேட்டிார் உள்ளங் கொள்ளும் வகை கூறிக் கேட்டார் பலரையும், இக்கலைகளில் அறிவு நிரம்பப் பெற்றவர்களாக ஆக்கி விட்டனர்.
இதனால், ஏதென்ஸ் நகர மாணவிகள் கலையின் நிமித்தம் கல்லூரியை நாடிக் கற்க வேண்டிய நியதி அற்றவர் ஆயினர். கலை அறிவோடு மிகமிக இன்றியமையாததாகக் கற்பிக்கப்பட்டு வந்த கலை, சொற்பொழிவு ஆற்றும் கலையே ஆகும். மிகுதியாகப் படிப்பதினும் படித்தவற்றைப் பிறர்க்கு எடுத்துக் கூறும் ஆற்றலை இவர்கள் பெரிதும் போற்றி வந்தனர். கற்றவற்றைக் கலைஞர் முன் கழறாதவர் ‘நாறா மலர் அனையர்’ என்றும் அன்றோ வள்ளுவர் வைகின்றார்?
நன்கு பேசுந் திறனுடையவரையே அக்காலப் பொதுமக்கள் விழைந்து நின்றனர். இஃது இயற்கை தான். தமிழ் நாடும் அவர்களையே விரும்பி ஏற்றுக் கொண்டது.
வாழ்க்கையில் வெற்றி காண விழைவோர் பேசுந்திறன் பெறுதல்வேண்டும் என்பது ஏதென்ஸ் நகர மக்கள் விருப்பம்.
இவ்வாறு கொல்மாரி ஆற்றி வந்த சோபிஸ்டுகள் கி. மு. 4 ஆம் நூற்றாண்டில், முறையாகப் பள்ளிக்கூடம் தொடங்க ஆரம்பித்து விட்டனர். அப்பள்ளிகளில் ஒன்று பிளேடா (Pluto) தலைமை