பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

யிலும், மற்றென்று அரிஸ்டாடில் (Aristotie) தலைமையிலும் நடந்தவை ஆகும்.

இந்த அளவில் கிரேக்கர் வரலாறு நின்றுவிட்டதாக எண்ணாமல், மேலும், இவர்களைப் பற்றிய வரலாற்றை விரித்த நூல்களைக் கற்று அறியவேண்டுவது நம் கடமை ஆகும்.


13. இறுவாய்

எதினிய நகரத் தலைவராக இருந்த பெரிகில்ஸ் மிகவும் சீரிய நோக்கங் கொண்டவர். இவர் ஏதென்ஸ் நகர மக்களின் நடை உடை பாவனைகளையே ஏனைய கிரேக்க மக்கள் பின்பற்ற வேண்டுமென்று எண்ணங் கொண்டனர்; இதனை நிறைவேற்றியும் வைத்தனர். எதினியவாசி அரசியல் வாதியாகவோ, சொல்மாரி பொழிபவனாகவோ, வீரனாகவோ இருப்பான். தனக்குக் கலை அறிவு, பாடல், ஆடல் பயிற்சி இல்லை என்றாலும், இக்கலைகளைப் பாராட்டாமல் இரான். எப்பொழுதும் சோம்பல் இன்றிச் சுறுசுறுப்பாக வாழவே இவன் விரும்புவான்.

ஏதென்ஸ் நகரவாசிகள் பொலோபோனேஷியப் போரில் (Poloponnesian) வீழ்ச்சியால் துன்புற்றனர். சிசிலியை நோக்கி எதிர்க்கப் புறப்பட்டதும் வெற்றிகரமாக முடியவில்லை. பெர்ஷியாவும், ஸ்பார்ட்டாவும், எகோஸ்போடாமி (Aegospotami) என்னுமிடத்தில் கி. மு. நாலாம் நூற்றாண்டின் முடிவில் கடற் போரில் ஏதென்ஸ் நகரை முறியடித்தன. ஏதென்ஸ் நகர மக்கள் கடற்போரில் தலைசிறந்தவ