பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101


வர் என்பது பழங்கதையாகப் போய்விட்டது. என்றாலும் ‘கடுகு சிறுதாலும் காரம் போவதில்லை’ என்பதுபோலத் தன் பண்டைய கடற் போர்ச் சிறப்பு அழியாதிருக்கப் பெரிதும் முயன்று வந்தனர்.

மெசிடோன் (Macedon) அரசராகிய பிலிப் (Philip) தம்மிடம் நன்கு பயிற்சி பெற்ற படையினைப் பெற்றிருந்தார். இவர் இன்னும் தம் நாட்டைப் பெற்றிருக்க வேண்டுமென்றும் அவாக் கொண்டிருந்தமையால், அதற்கேற்ற வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தனர். ஏதென்ஸ் நகரத்திற்கும், தீபஸ் நகரத்திற்கும் நடந்த போரைக் குறித்தும் பிலிப் ஒரு முடிவு அறவேண்டுமென்று கேட்டுக் கொண்டபோது இவ்விரு நகரங்களும், மெசி தோனின் படையையே எதிர்க்க ஆரம்பித்தன. இதன் பலன் தோல்வியே ஆகும்,

ஏதென்ஸ் நகர மக்கட்கு இருந்த உயர்ந்த நாட்டுப் பற்றும், போர்ப் பயிற்சியும் நாளுக்கு நாள் பிற்போக்கு அடைந்தன. பிலிப் மன்னர்க்குப் பிறகு, அவர் குமாரர் அலெக்சாண்டர் பாரசீகப் பேரரசை வென்றார். அதனால் லெவண்டர் (Levent) பட்டின முழுமையும் கிரேக்கர்கள் நாகரிகம் வளர லாயிற்று. இவ்வாறு நாகரிகம் வளர்ந்த பட்டினங்களில், ஈஜிப்த் தேசத்து அலெக்ஸாண்டிரியா முதன்மை பெற்றதாகும். இந்தச் சமயத்தில் தான், நோய்க்கேற்ற மருந்துகளைக் கண்டு பிடிக்கவும் நுண் கலைகளை வளர்க்கவும் மக்கள் அறிவைச் செலுத்தினர்.