5
கொண்டுவர வேண்டியதாகும். அக்கேயர்கள் வில்லையும் கல்லையும் தம் படைகளாகப் பயன்படுத்தி வந்தவர்களாயினும், இவர்கள் மிகவும் விரும்பிக் கொண்ட ஆயுதம் ஈட்டியாகும். இவர்கள் எதிரிகள் எய்யும் படைகள் தம்மீது படா வண்ணம் இருக்கப் போருடைதரித்து இருந்தனர். இது மெய்க் கவசம் எனப்படும். இவர்கள் தலையில் நல்ல உலோகத்தாலான தொப்பியை அணிந்திருந்தனர். இவர்கள் மார்பில் தோலாலேனும், உலோகத்தாலேனும் செய்யப்பட்ட உடையைத் தற்காப்புக்காக அணிந்திருந்தனர். கால்களிலும் உலோகத்தாலாகிய கால் பாதுகாப்புக்குரியமேசோடு போன்ற காலணியைக் கொண்டிருந்தனர். எருதின் தோலாலாகிய நல்ல வேலைப்பாட்டுடன் கூடிய கேடயத்தைத் தம் கையகத்துக் கொண்டிருந்தனர். இன்னோரன்ன கனம் மிக்க உடைகளையும் படைகளையும் ஒரு வீரன் தாங்கில்செல்ல வேண்டியிருந்ததால்தான், நடந்து செல்ல இயலாதவனாய்த் தேர் மீது இவர்ந்தேசெல்ல வேண்டியவனாய் இருந்தான் என்பது தெரிய வருகிறது. நம் நாட்டு வீரரும் தேரூர்ந்தன்றே செருச் செய்தனர்? மறத்தினும் அறமே காட்டும் மாண்பு அக்கேய வீரர்பால் அமைந்த ஒரு சீரிய பண்பாகும். பலர் கூடி ஒருவரை அடக்கும் குணம் இவர்கள்பால் இல்லை. ஒருவரை ஒருவர் ஒறுக்கும் குணமே ஓங்கி இருந்தது. இதுவும் தமிழ்நாட்டு இயல்புகளில் ஒன்றாகும்; ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிடும் முறையைக் கொண்டே அவர் திறன் கூறும் பண்பு அக்காலத்தில் இவர்களிடையே இருந்தது. பொதுமக்கட்குப்