பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


போரில் அதிகப் பொறுப்பு கிடையாது. அவர்கள் கொண்டிருந்த படைவலியும் மிகக் குறைவானதே. அவர்களால் மும்முரமான போரில் முன் நின்று போர் செய்ய இயலாது.

பொதுமக்களுக்குப் போரின்றி அமைதி நிலவிய போது, எதிலும் சிறந்த பங்குகொள்ளும் பேறு கிடையாது. அக்கேய மரபினருள் எவன் போர்ப் படையை நடத்திச் சென்றவனோ, அவனே தலைவன் என்னும் தகுதிக்குரியவன் ஆவான். அவன் போர்ப் படையைத் திறம்பட நடத்திச் செல்லும் வாய்ப்புப் பெற்றதோடு நில்லாமல், தம் மரபினர் நல்வாழ்வு கருதித் தம் மரபுக்குரிய கடவுளர்கட்கும் பலியிட்டு, அவர்கள் மனங்குளிரச் செய்யும் பொறுப்பையும் பெற்று விளங்கினான் தன் மரபினர்க்கு இடையே ஏதேனும் மனக் கலக்கம் ஏற்பட்டாலும் அதனைத் தீர்த்துவைக்கும் கடனும் இவனைச் சார்ந்ததேயாகும்.

பொது மக்கள் வாழ்க்கை

அக்கேயர்களின் வாழ்க்கை வரலாற்றை இன்னமும் தெள்ளத் தெளிய உணரவேண்டினால் ஹோமர் எழுதிய பாடல்களைக் கொண்டு நன்கு அறியலாம். அவையே “இலியட்டும் ஒடிசியும்” (Illiad, Odyssey) ஆகும்.

இவர்கள் நன்கு உண்ணும் இயல்பினர்; ‘எல்லாம் வயிற்றுப் பெருமான் பொருட்டு’ என்னும் குணத்தினர். இது மக்கட்கு இயல்புதானே! பசி