13
வணங்கி வந்தனர். அத்தேவதைகள் கெட்ட தேவதைகளாகக் கருதப்பட்டு வந்தன. அத்தேவதைகளின் உள்ளம் குளிர்வதற்காக விலங்கினங்களைப் பலியிட்டு வந்தனர். சிற்சில வேளைகளில் மக்களையும் பலி கொடுப்பதுண்டு. இவர்கள் வழிபட்ட தேவதைகளில் மினோடார் (Minotaur) என்பதும் ஒன்று. இது ஒரு பாதி எருமை வடிவமும், மற்றெரு பாதி மனித வடிவமும் கொண்டது. இஃது இளவயதுடைய ஆண் பெண் மக்களை உண்டே வாழ்வதாக இவர்கள் கருதிவந்தனர். இந்தக்கொடிய பழக்கத்தை அக்கேயர்கள் கிரீஸ் தேசத்துப் பழங்குடி மக்களிடமிருந்து கைக்கொண்டனர் எனலாம். ஏனெனில் அகமெம்னன் (Agamemon) தம்மகளான இப்ஹிஜினியா (Iphigenia) என்பவளே இத்தெய்வத்திற்குப் பலி கொடுத்த பிறகே டிராய் தேசத்தவரோடு போர் தொடுக்கச் சென்றதனால் இஃது அறியப்படுகிறது. ஆனால், இந்தப் பழக்க வழக்கங்கள் யாவும், நாளடைவில் மறைந்துகொண்டும் மாறிக் கொண்டும் வந்தன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினுனே” என்பது இயற்கை விதி அல்லவா? இதானல்தெய்வம் தனக்கென ஓர் உருவம், ஒரு பேரும் ஒன்றும் இல்லாத ஒரு தனிப் பொருள் என்பதும், மக்களது உள்ளக்கிடக்கைக் கேற்பக் குறிகளை பெற்று, அன்பர்களது வேண்டுகோளை நிறைவேற். றும் என்பதும் புல்குகின்றன அன்றே ! இதானல் தான் நம் முன்னோர் இறைவனது உண்மைத் தன்மையைக் கூறும்போது,