பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

 மக்கள் தொகை சிறியதாகும். ஆகவே, உள்ளுர் ஸ்பார்ட்டாவின் பூர்விகக் குடிகளிடத்தில் அச்சங் கொண்டே வாழ்ந்தனர்.

உழுதொழிலையே மேற்கொண்ட கூலி உழவர்களுக்கிடையே கி. மு. 7 ஆம் நூற்றாண்டில் ஒரு குழப்பம் தோன்றியது. அக்குழப்பத்தை ஸ்பார்ட்டா மக்கள் அடக்கி ஒடுக்கினர். இதனால் தங்கட்குத் தீங்கு நேரும் என்று மனதில் அச்சங் கொண்ட ஸ்பார்ட்டா நாட்டு மக்கள் தங்கள் வாழ்வைச் சிறிது மாற்றி அமைப்பதற்காகவும், உள்ளுர் வாசிகள் எதிர்த்தால் அவ்வெதிர்ப்பைச் சமாளிக்கவுமான வழி வகைகளைக் கோலுவதற்குத் தீர்மானித்தனர். வருங்கால நாட்டை நன்னிலைக்குக் கொண்டு வரும் பொறுப்பு இவர்களைச் சார்ந்தது. ஆதலின், அவ்விளைஞர்களை வளர்க்கும் முறையில், முதல் முதல் சிந்தை செலுத்துவாராயினர்.

பிள்ளை வளர்ப்பு

குழந்தைகளின் வளர்ப்பில் சில முறைகள் கையாளப்பட்டன. குழந்தை பிறந்ததும், அது வன்மை வாய்ந்ததா, மென்மை வாய்ந்ததா என்பது குடும்பப் பெரியோர்களால் தீர்மானிக்கப்பட்டுவந்தது. திருக்காளத்திவேடவர் தலைவனான நாகனும் தன் பிள்ளையைப் பெரியவர் கையில் கொடுத்து, அவர்கள் தூக்கிப் பார்த்துக் கனமான பிள்ளை என்று அறிந்தே திண்ணன் என்று பெயரிட்டதாக நாமும் அறிந்தோம். மெலிந்து காணப்பட்டால் அதனை வளர்ப்பதில் பயனில்லை எனக் கருதி, மலையில் ஒர் இடத்திலிட்டு, அது தானே அழுது சாகுமாறு