பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

களில், எதிரிகளை அழிக்கும் பொருட்டுச் சிறிது மாற்றப்பட்டது; தம் பொது விதியினின்றும் விலகிப் போரிடவும் நேர்ந்தது. இவர்கள் நகர்ப் புறங்களின் சுவர்களுக்குப் புறத்தே மறைந்து நின்று எதிர்ப்பது பொதுவான வழக்கமாகும். பகைவர்களின் அரண்களைத் தகர்த்தற்குத் தீப் பொறி ஊடுருவிகள் பயன்படுத்தப்பட்டன. நாடு நகரங்களை எரிகொளுவச் சிற்சில பொறிகள் உபயோகப் படுத்தப்பட்டன. சிற்சில இடங்களில் கோட்டை அரண்கள் கடத்தற்கருமையாக இருந் தால், அவற்றைத் தாண்டி உள்செல்ல, மண் மேடுகள் அரணைச்சுற்றி ஆக்கப்பட்டன. சிற்சில இடங்களில் எதிரிகளை உள்ளே வரவொட்டா திருக்கப் பள்ளங்கள் எடுக்கப்பட்டன. மற்றும் சிற்சில இடங்களில் பெரியபெரிய மதில்கள் எழுப்பப் பட்டு எதிரிகள் வெளியிடங்களில் யாதோர் உதவி யும் பெருவகையில் தடைகள் செய்யப்பட்டன.

ஸ்பாட்டர்கள் போர், தொடர்ந்து நீ ண் ட நாளைக்கு நடைபெருது. இவர்கிள் பெரிதும் உழவுத் தொழிலில் ஈடுபட்டவர். ஆதலின், இவர்களது போர், மாரிக் காலத்தில் நடப்பது அரிதாகும். கோடைக்கும் மாரிக்கும் இடைப்பட்ட காலத்தில் தான் போருக்கும் கிளிம்புவர். அப்போரும் விரை வில் முடிவதாய் இருக்கும். ‘உண்டி முதற்றே உணவின் பிண்டம்’, அன்னம் ஒடுங்கில் அனைத்தும் ஒடுங்கும்’ ஆதலின் எதிரிகள் ஒருவரை ஒருவர் எதிர்க்கும்போது முதலில் பயிர் பச்சைகளை அழிக்க முனைந்து நிற்பர்.