பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35


கால் வெறும் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவர் போன்று பேசுதல் கூடாது. பேசுகையில் உடல் அசைவு, கையசைவு முதலான உறுப்பு அசைவுடன் பேச்சின் பொருள் வெளிப்படுமாறு பேச வேண்டும். இவ்வாறு பேசி நற்பெயர் எடுத்தவர் கிளியான் (Cleon) என்பவர் ஒருவரே. அவர் பேச்சும் உணர்ச்சியும், பொருட்செறிவும் கொண்டதாக இருந்ததால், மக்கள் அதனைப் பெரிதும் வரவேற்றனர். ஒரு சமயம் ஏதென்ஸ் நகரமும், ஸ்பார்ட்டா நகரமும் போரிடத் தொடங்கியபோது யார் தலைவர் பதவி ஏற்று வெற்றி காணுவதற்குரியவர் என்பதைப் பற்றிய விவாதம் ஏற்படக் கிளியான் தாமே தலைமை பூண்டு வெற்றிக்கொண்டு வருவதாகத் தம்மைத் தாமே புகழ்ந்து பேசினார்.

அவர் வார்த்தையில் நம்பிக்கை கொண்ட நகர மாந்தர் உடனே அப்பொழுது புடைத் தலைவராக இருந்த ஜெனரல் நிஸ்யாஸ் (General Nicias) என்பவரை அப்பதவியினின்றும் வெளியேற்றச் செய்யுமாறு வற்புறுத்திக் கிளியானையே போர்த் தலைவராக நின்று போரில் வெற்றி காணுமாறு விழைந்தனர். அவ்வாறே, கிளியான் அப்பதவியேற்று வெற்றி பெற்றுத் திரும்பினர். இவ்வெற்றி ஏதோ எதிர்பாராத நிலையில் ஏற்பட்டது எனலாம். இது ‘காக்கை ஏறப் பனம்பழம் விழுந்தது’ என்பது போன்றது. இவ்வாறு பேச்சினால் மிரட்டிப் பொதுமக்கள் மனத்தை மாற்றினால், மிக மிக இன்றியமையாத செயல்களிலும், இப்பேச்சு மயக்கம் புகுந்து, நாட்டின் நலனுக்கே கேடு பயக்க வல்லதாகவும்